This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

முதல் வயதில் உங்கள் குழந்தையின் பற்களை பிரஷ் செய்வதற்கான படிப்படியான வழிமுறை (Step-by-Step Guide to Brush Your Baby's Teeth During the First Year of Life In Tamil)

Care for Baby
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 17, 2025
முதல் வயதில் உங்கள் குழந்தையின் பற்களை பிரஷ் செய்வதற்கான படிப்படியான வழிமுறை (Step-by-Step Guide to Brush Your Baby's Teeth During the First Year of Life  In Tamil)
Read time3 min

உங்கள் குழந்தைக்கு பால் பற்கள் முளைக்கும் போது மிகவும் துறுதுறுப்புடன் எல்லாவற்றையும் கடிக்கத் துவங்கும். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உங்கள் குழந்தையின் ஈறுகள் முழுவதும் பால்பற்களால் நிறைந்திருக்கும். பால் பற்களானது முதிர்ந்த பற்களுக்கு பிளேஸ் ஹோல்டர்களாக செயல்படுகின்றன, இது பல் முளைப்பதற்கு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த சரியான அடித்தளம் இல்லையென்றால் உங்கள் குழந்தை சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் சிரமப்படலாம். எனவே குழந்தையின் பற்களில் கேவிட்டி ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.

இப்போதே தொடங்குங்கள் (Get started immediately)

உங்கள் குழந்தையின் ஈறுகளை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொள்ளுங்கள். மென்மையான பருத்தி துணியைப் பயன்படுத்தி குழந்தையின் ஈறுகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை துடைப்பதை உறுதி செய்வதன் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம். குறிப்பாக உணவளித்த பிறகும் தூங்க வைப்பதற்கு முன்பும் துடைத்து விடவும். இது பாக்டீரியாக்கள் வாயில் ஒட்டிக்கொள்வதைத் தடுப்பதோடு பற்களை சேதப்படுத்தும் பற்படலம் உருவாவதிலிருந்து காக்கும்.

பிரெஷ் செய்யும் வழக்கம் (burshing routine in Tamil)

பால் பற்கள் உதிரத் துவங்கும் போது நீங்கள் பிரஷுக்கு மாறலாம். சிறிய தலை, பெரிய கைப்பிடி மற்றும் மென்மையான முட்கள் கொண்ட ஒரு பிரஷ்ஷைத் தேர்ந்தெடுக்கலாம்.

பற்கள் வெளியே வரும்போது பிரெஷ் இல் அரிசிமணி அளவு பேஸ்ட் எடுத்துக்கொண்டு பற்களின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் மெதுவாக பிரெஷ் செய்து விடவும்.

தினமும் பிரெஷ் செய்யும்போது, பற்களில் ​​மங்கல் நிறமாக அல்லது பல் சிதைவுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அவ்வாறு ஏதேனும் சிக்கல்கள் தென்பட்டால், பல் மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி ஆகும். பல் பராமரிப்பு, பல் துலக்குதல் மற்றும் விரல் சப்புதல் போன்ற பிரச்சனைகளைப் பற்றி அவர்கள் உங்கள் சரியான ஆலோசனையை வழங்குவார்கள்.

பற்கள் முளைக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் (Teething problems In Tamil)

பால் பற்கள் அனைத்தும் முளைத்து வெளிவருவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். அவை முளைத்து வரும் செயல்முறையே பல் முளைத்தல் என்றழைக்கப்படுகிறது. மேலும் இது உங்கள் குழந்தைக்கு ஒரு அசௌகரியமான மனநிலையை அளிக்கும். பார்ப்பவற்றை எல்லாம் கடிக்க முயல்வது, ஈறுகளில் வீக்கம் மற்றும் இயல்பை விட அதிக உடல் வெப்பநிலை போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.

இந்த வலியைக் குறைக்க குழந்தைக்கு டீத்திங் ரிங்குகளை மெல்ல அனுமதிக்கலாம். டீத்திங் ரிங்குகளில் உடைந்த பாகங்கள் ஏதும் உள்ளனவா என்பதைச் சோதித்த பின்னரே அனுமதிக்கவும், இல்லையென்றால் அதனை விழுங்கி அதன் மூலம் குழந்தைக்கு ஏதேனும் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படலாம்.

உங்கள் குழந்தையின் ஈறுகளை சுத்தமான விரல்களால் தேய்க்கலாம் மற்றும் பல் துலக்குவதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மேற்பூச்சு வலி நிவாரணிகளைப் பயன்படுத்தலாம்.

பற்குழிகள் வராமல் தடுத்தல் (Preventing cavities In Tamil)

பற்களில் கேவிட்டி வளர்ச்சியைத் தடுக்க, சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பற்களில் சிதைவை ஏற்படுத்தும். அதோடு உங்கள் குழந்தையின் டீத் ரிங்கில் சர்க்கரை அல்லது தேன் பயன்படுத்துவதையும் தவிருங்கள்.

Tags :

Teething rings precautions in tamil, teething rings in tamil, brushing routine for babies in tamil, dental cavities in babies in tamil, Step-by-Step Guide to Brush Your Baby's Teeth During the First Year of Life In English, Step-by-Step Guide to Brush Your Baby's Teeth During the First Year of Life In Hindi, Step-by-Step Guide to Brush Your Baby's Teeth During the First Year of Life In Telugu, Step-by-Step Guide to Brush Your Baby's Teeth During the First Year of Life In Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.